இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும்போது நீங்கள் போதுமான டாக்குமெண்ட்கள் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது நீங்கள் வழங்கிய டாக்குமெண்ட்களில் பிழைகள் இருந்தாலோ இன்சூரன்ஸ் கிளைம் அங்கீகரிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம்.

ஆயுள் காப்பீடு என்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதற்கு உதவும் ஒரு திட்டமாகும். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவருடைய இன்சூரன்ஸ் கிளைம் தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ அதனால் மன உளைச்சல் இன்னும் அதிகமாவதோடு பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். எனவே எந்தெந்த காரணங்களால் இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படலாம் என்பதை விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல்நல பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பது:
உங்களுடைய இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான முதன்மை காரணம் பாலிசி வாங்கும் சமயத்தில் நீங்கள் வழங்கிய தவறான அல்லது நிறைவுறாத ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்கள். ஒருவேளை உங்களுக்கு பாலிசியை வாங்குவதற்கு முன்பே டயாபடீஸ், ஹைப்பர் டென்ஷன் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது பாலிசி காலத்தில் நீங்கள் புகைப்பிடித்துக் கொண்டிருந்தாலோ அதனால் உங்களுடைய கிளைம் நிராகரிக்கப்படலாம். எனவே பாலிசி வாங்கும்போது உங்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் நீங்கள் வெளிப்படையாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிப்பது அவசியம்.


