கடந்த மார்ச் மாதம் ஜிப்மரில் பணியாற்றும் சஜித் என்பவர் இணைய வழியில் வந்த பங்குச்சந்தையில் 30 லட்ச ரூபாய் முதலீடு செய்து பணத்தை இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்திருக்கிறார்.
இது சம்பந்தமாக இணைய வழியாக  காவல் நிலையத்தில் கொடுத்த புகார் விசாரணை செய்யப்பட்டு மேற்படி வழக்கில் இழந்த பணத்தில் 18 லட்ச ரூபாயை இணையவழி போலீசார் மீட்டு அவருடைய வங்கி கணக்கிற்கு மாற்றியிருக்கிறார்கள்.
போலி பங்கு மோசடியில் சிக்கி இழந்த பணத்தில் 18 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்ததற்காக நேற்று சஜித் மற்றும் அவருடைய குடும்பத்தார் இணைய வழி காவல் நிலையத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் ஆய்வாளர்கள் தியாகராஜன் கீர்த்தி உதவி ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் காவலர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து சென்றிருக்கிறார்கள்
 
						 
			 
						

