வலைவிரிக்கும் அதானி கடனில் தத்தளிக்கும் ஜெயப்பிரகாஷ்
பவர் வென்சர்ஸை வாங்க அதானி திட்டம்
ஜெயபிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனம் அதீத கடன் சுமையால் தவித்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கவும் குறிப்பாக சிமெண்ட் ஆலையை மொத்தமாக வாங்கவும் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை அதானி குழுமம் கைப்பற்றியது
மத்திய பிரதேசத்தில் உள்ள நிக்ரி பகுதியில் ஜெய்பிரகாஷ் அசோசியோட்ஸ் நிறுவனம் 20 லட்சம் டன் சிமெண்ட் அரைத்து தயார் செய்து வருகிறது. இதனை குறிவைத்து அதானி குழுமம் மொத்தமாக வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிமெண்ட் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 14 கோடி டன் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதானி குழுமம் அதிக தொகையை சிமெண்ட் உற்பத்தியில் இறக்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 200 பில்லியன் ரூபாய் அளவுக்கு சிமெண்ட் ஆலைகளை அதானி குழுமம் வாங்கி குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.