ரூ.70 கட்டினால் போதும்
மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஜுலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல் எண், பிபிஓ எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க முடியும். இதற்கான சேவை கட்டணமாக ரூ.70ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.