ரூ.80க்கு மீன்குழம்புடன் மதிய உணவு! திருச்சி கோஸ்டல் மீன் மார்ட்டில் ஆரம்பம்
திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் GP காம்ப்ளக்ஸில் உள்ளது கோஸ்டல் மீன் மார்ட் என்ற கடல் மீன்கள் விற்பனையகம்.
இங்கு நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தொண்டி, அதிராம்பட்டிணம், மீமீசல், கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் நேரடியாக தரமான மீன்கள் கொள்முதல் செய்து, மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
தினசரி காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மீன்வறுவல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மதியம் ரூ.80-க்கு சாப்பாடு, மீன் மற்றும் மீன் குழம்புடன் விற்பனை தொடங்கியது. தற்போது பார்சல் மட்டும் மதியம் வழங்க உள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோர் 97877 78807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.