மகிந்திரா அண்ட் மகிந்திரா & டி.வி.எஸ். நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பு!
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா அண்ட் மகிந்திரா கடந்த நவம்பர் மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 30,392 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 56 சதவீதம் அதிகமாகும். 2021 நவம்பர் மாதத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் மொத்தம் 19,458 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.
நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 2,77,123 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 நவம்பர் மாதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி மொத்தம் 2,72,693 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.
நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவமான பஜாஜ் ஆட்டோ கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 3,06,552 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 19 சதவீதம் குறைவாகும். 2021 நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3,79,276 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.