பேசினால் கிடைக்கும் காசு..!
தற்போதைய சூழலில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகிறது. சிறுவர், சிறுமியர் முதல் திருமணமானவர்கள் என பலருக்கும் மனபாதிப்பு நோய் அதிகரித்து வருகின்றன.
உளவியல் கல்வி பயின்றவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் ஒருவருக்கு கவுன்சிலிங் வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்டலாம். உளவியல் படித்த பெண்களுக்கு இது ஒரு அருமையான பணி.
மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுத்து வருவாய் ஈட்டலாம்.