பிஎப் கணக்கு அப்டேட் அவசியமா..!
நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து வெளியேறி வேறு நிறுவனத்தில் சேர்ந்தாலும் வேலையே பார்க்காமல் இருந்தாலும் உங்கள் பிஃஎப் கணக்கை அப்டேட் செய்வது கட்டாயமாகிறது. அப்போதுதான் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். சரி அப்டேட் செய்ய பிஃஎப் அலுவலகம் செல்ல வேண்டுமா என்றால் அது தான் இல்லை. நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் உங்கள் பிஃஎப். கணக்கை அப்டேட் செய்யலாம்.
பிஎஃப் அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற வெப்சைட்டில் சென்று அதில் உங்களுடைய பிஎஃப் நம்பர் (UAN), பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும். பின்னர் ‘manage’ ஆப்சனில் உள்ள ‘make exit’ என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் வேலை பார்த்த நிறுவனம் மற்றும் பிஎஃப் நம்பரை டிராப் டவுன் பாக்ஸில் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய தேதியையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.
அடுத்ததாக ஓடிபி ஆப்சனை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு ‘update’ கொடுக்க வேண்டும். உங்களது அப்டேட் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான மெசேஜ் ஸ்கீரினில் வரும். அவ்வளவுதான். இப்போது உங்களது பிஃஎப் கணக்கு அப்டேட் ஆகிவிட்டது.