சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் காளாண் வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி வரும் 25ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜா பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் தொழில்முனைவோராக பல்வேறு பயிற்சிகள் அவ்வப்போது நடை பெற்று கொண்டு வருகிறது.

இதன், ஒரு பகுதியாக வருகின்ற அக்டோபர் 25ம் தேதி அன்று காளான் வளர்ப்பு குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட் டுள்ளது. அதில், பல்வேறு வகையான காளான்களை கண்டுபிடித்தல், அவற்றை வளர்க்கும் முறைகள், நிர்வாகம், வணிக காளான் வளா்ப்பு செயல் விளக்கம் காளான் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோர்களின் சொற்பொழிவு, சந்தை தகவல், காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பு முறைகள் போன்றவை எடுத்துரைக்கப்படும்.
வரும் 24ம் தேதி மாலை 5 மணிவரை பதிவு செய்வோர் மட்டுமே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கையேடு, சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்வோர் 25ம் தேதி காலை 9 மணிக்கு வந்து, கட்டணமாக ரூ.590 நேரிடையாக செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ஷீபா ஜாஸ்மினை அலுவலக நேரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி எண் 8122586689/0431-2962854 தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.