தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் இலால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புச்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பரமசிவபுரம் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,
நாளை(சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4மணி வரை பரமசிவபுரம், பரமசிவபுரம் விஸ்தரிப்பு, தெற்கு காமராஜ் நகர், உமா்நகர், பாரதிநகர், வி.ஓ.சி. நகர், காமராஜ் நகர், பாலாஜிநகர், ஆங்கரை, மலையப்பபுரம் ஆகிய இடங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.