சர்வதேச தரத்திலான ஏலத்தின் அடிப்படையில் 5 நிறுவனங்களுக்கு காந்தம் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக REPM எனப்படும் அரிய வகை சக்தி வாய்ந்த காந்தம் உற்பத்திக்கான 7,280 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மின்சார வாகனங்கள், செல்போன்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விமானம் மற்றும் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களுக்கு, சக்தி வாய்ந்த அரிய வகை காந்தம் இன்றியமையாதது. இதன் தேவை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் முதன் முறையாக அரிய வகை சக்தி வாய்ந்த காந்தம் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஆண்டுகளுக்கு விற்பனை சார்ந்த ஊக்கத்தொகையாக 6,450 கோடியும், மூலதன மானியமாக 750 கோடி ரூபாயும் செலவிடப்படும் என கூறப்பட்டுள்ளது.


