குறைந்த விலையில் பொருள் விற்கும் நிறுவனத்திற்கான அபாயம்
சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் லாப சதவீதத்தை குறைத்துகொண்டு தங்கள் பொருட்களை குறைந்த விலையில் விற்க முயல்கின்றன. இதனால் குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை இந்நிறுவனங்கள் பெறுகின்றன.
குறைவான லாபத்தால் சிறு நிறுவனங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உருவாகும். இந்நிறுவனங்கள் விற்கும் விலையை விட மிகவும் குறைந்த விலைக்கு ஆபர் என்ற பெயரில் வேறு நிறுவனங்கள் தரும்போது மக்கள் அங்கே நகர தொடங்கிவிடுவார்கள். எனவே குறிப்பிட்ட காலத்திற்கு பின் இந்த அபாயங்களை நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.