உயர்தர கார்களான டெஸ்லா, நிசான், ரினால்ட், ஃபோர்டு, வோக்ஸ்வேகன் கார்களில் மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் ஃபோன் செயலிகளை இணைப்பதன் மூலம் கார் உரிமையாளர்களின் தரவுகள் திருடப்படலாம்.
காஸ்பர்ஸ்கையின் (kaspersky) இணைக்கப்பட்ட செயலிகள் என்ற அறிக்கையில் கார்களை ஸ்மார்ட் ஃபோனுடன் இணைக்க 69 மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஸ்பர்ஸ்கையின் பாதுகாப்புத் தலைவர் செர்ஜி சோரின் கூறியதாவது,
டெஸ்லா, நிசான், ரினால்ட், ஃபோர்டு, வோக்ஸ்வேகன் போன்ற கார்களிலேயே இது போன்ற செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம், இந்த செயலிகள் பாதுகாப்பானவை இல்லை என்கிறது ஆய்வு.
இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google play store) 2 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. எப்படி பயனாளர்கள் மூன்றாம் தரப்பு செயலியை நம்பி தங்களது தரவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சார்யம் என்றார்.