குறைந்த பிரீமியம், அதிக போனஸ், கடன் வசதி, தனிநபர் காப்பீடு என சலுகைகளை வாரிவழங்கும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
குறைந்த பிரீமியம், அதிக போனஸ், கடன் வசதி, தனிநபர் காப்பீடு என சலுகைகளை வாரிவழங்கும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
இன்சூரன்ஸ் என்றாலே எல்.ஐ.சி. மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எல்ஐசி போல் இந்திய அஞ்சல் துறையும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் என இருவேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன.
குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனஸ், வருமான வரிச் சலுகை, கடன் வசதி, நாமினி மாற்றம் செய்யும் வசதி, தனிநபர் காப்பீடாக ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதல் பிரீமியம் செலுத்தி விண்ணப்பம் முறையாக தலைமை தபால் நலையம் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஆயுள் காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. எந்த ஊரில் பாலிசி எடுத்திருந்தாலும், பாலிசிதாரரோ, நாமினியோ எந்த ஒரு தபால் அலுவலகத்திலும் கடன் முதிர்வு தொகை, இறப்பிற்கான பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஆறு வகையான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கிராம சுரக்ஷா, கிராம சந்தோஷ், கிராம சுவிதா, கிராம சுமங்கலி, யுகல் சுரக்ஷா மற்றும் பால ஜீவன் பீமா என்பதே அந்த ஆறுவகையான திட்டங்களாகும்.
கிராம சுரக்ஷா, கிராம சந்தோஷ், கிராம சுவிதா ஆகிய மூன்று காப்பீட்டிலும் 19&55 வயதினர் வரை இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை ரூ.20,000 வரையிலும், அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரையிலும் க்ளைம் செய்ய முடியும். இந்த பாலிசி போட்ட நான்கு வருடத்திற்கு பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம். 3 வருடத்திற்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியில் பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு, நாமினிக்கு, முதிர்வு தொகை கிடைக்கும்.
இதில் கிராம சந்தோஷ் எனப்படும் இந்த எண்டோவ்மென்ட் பாலிசியினை பொறுத்தவரையில் பாலிசிதாரர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வயது முதிர்ச்சியை அடையும் வரை, அதாவது 35, 40, 45, 50, 55, 58 மற்றும் 60 வயதை எட்டும் வரை, உத்திரவாத தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கோ அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கோ போனஸூடன் முழு தொகையும் உறுதி செய்யப்படும்.
கிராம சுவிதா பாலிசியினை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எண்டோவ்மென்ட் பாலிசியாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
கிராம சுமங்கலி என்பது ஒரு மணி பேக் திட்டமாகும். இதில் ரூ.50 லட்சம் வரை உறுதி தொகை செய்யப்படுகிறது. இந்த பாலிசி அவ்வப்போது வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற ஒரு பாலிசி. சர்வைவல் சலுகைகள் காப்பீட்டாளருக்கு அவ்வப்போது வழங்கப்படுகின்றன. பாலிசி காலம் 15 வருடங்கள் மற்றும் 20 ஆண்டுகளாகும்.
யுகல் சுரக்ஷா என்பது ஓரு கூட்டு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதில் மனைவி பிஎல்ஐ பாலிசிகளுக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும். இதில் இருவருக்கும் போனஸ் மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தொகை இந்த பாலிசி மூலம் கிடைக்கும். இந்த பாலிசியில் 21–&45 வயது வரையில்; உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
பாலஜீவன் பீமா என்ற இத்திட்டம் பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு காப்புறுதி காப்பீடு வழங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள் மட்டுமே பாலிசி எடுக்க தகுதியுடையவர்கள்.
குழந்தைகளின் வயது 5&-20 வயது இருக்க வேண்டும். இதில் அதிகபட்ச தொகை மொத்தமாக 3 லட்சம் அல்லது குறைவாக உள்ள பிரதான பாலிசிதாரரின் உத்தரவாதத்திற்கு சமமானதாகும். முக்கியமாக பாலிசிதாரர் (குழந்தைகளின் பெற்றோர்) 45 வயதை அடைந்திருக்கக் கூடாது. இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால், பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. பெற்றோருக்கான பாலிசி காலவரை முடிந்த பின் குழந்தைக்குச் பெறப்பட்ட போனஸ் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும்.