சர்வதேச சந்தையில் வெள்ளிக்கு நிலவும் கடும் கிராக்கியே இந்த விலையேற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்த நிலையில் வெள்ளி வரலாறு காணாத வகையில் புது உச்சம் தொட்டதுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது. அமெரிக்காவில் நடக்கும் மாற்றங்களே இதற்குப் பிரதானக் காரணமாக இருந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை அறிவிக்க ஆரம்பித்தவுடனேயே தங்கம் விலை உச்சம் தொட்டது. அதுவே இப்போது வரை தொடர்கிறது.

அதேநேரம், தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் வெள்ளி இன்றும் கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிராம் வெள்ளி 8 ரூபாய் உயர்ந்து 207 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளிக்கு நிலவும் கடும் கிராக்கியே இந்த விலையேற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
செமிகண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பில் வெள்ளியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுவதே இந்த விலையேற்றத்திற்கு காரணமாகவும் கருதப்படுகிறது.


