உங்கள் ஆதார் கார்டை வேறு யாராவது பயன்படுத்தினால், எதிர்காலத்தில் நீங்கள் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆதார் கார்டை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்பதை நீங்கள் சரிபார்க்கக்கூடிய சில…
இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு ஒரு முக்கியமான அடையாள அட்டை ஆகும். இது அடையாளம் மற்றும் முகவரிக்கான தனித்துவமான சான்றாக செயல்படுகிறது. இதன் 12 இலக்க எண் அரசு திட்டங்கள், வங்கி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான அக்சஸ்-ஐ வழங்குகிறது. சில சமீபகாலங்களில் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர். முக்கியமான தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைச் சேமித்து வைப்பதால் ஆதார் அட்டையை கவனமாகக் கையாள வேண்டும். தொலைந்துவிட்டால் அல்லது தவறாகப் பயன்படுத்தினால், அது கடுமையான அபாயங்களை ஏற்படுத்தலாம். எனவே, உங்களின் ஆதார் விவரங்களைப் பாதுகாப்பதும், தவறான பயன்பாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம்.

ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதாவது UIDAI ஆனது ஆதார் பயன்பாட்டைக் கண்காணிக்க யூசர்களை அனுமதிக்கிறது. இதன் மூலம் உங்கள் ஆதார் எங்கு, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்கவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடியும். ஏனென்றால், உங்கள் ஆதார் கார்டை வேறு யாராவது பயன்படுத்தினால், எதிர்காலத்தில் நீங்கள் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆதார் கார்டை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்பதை நீங்கள் சரிபார்க்கக்கூடிய சில உதவிக்குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
ஆதார் ஆதென்டிகேஷன் ஹிஸ்டரியை சரிபார்ப்பதற்கான வழிகள்:
முதலில் நீங்கள் myAadhaar போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
இங்கே நீங்கள் உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை கொடுக்க வேண்டும். அதன் பிறகு, லாகின் வித் OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். இதை என்டர் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, ‘ஆதென்டிகேஷன் ஹிஸ்டரி’ என்ற ஆப்ஷன்-ஐ செலக்ட் செய்யவும். பிறகு, குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை சரி பார்க்க தேதியை செலக்ட் செய்யவும். இதன் மூலம் ஆதார் அட்டையை நீங்கள் எங்கு பயன்படுத்தியுள்ளீர்கள், வேறு யாரேனும் பயன்படுத்தியுள்ளனரா என்பதை கண்டறியலாம்.
பட்டியலிடப்பட்ட ட்ரான்ஸாக்ஷன்களை கவனமாகப் பார்க்கவும். சந்தேகத்திற்கிடமானதாக ஏதேனும் கண்டால் உடனடியாக UIDAI-க்கு புகார் செய்யுங்கள்.
எவ்வாறு புகாரளிப்பது?
புகாருக்கு நீங்கள் UIDAI கட்டணமில்லா எண் 1947ஐ அழைக்கலாம்.
இது தவிர, help@uidai.gov.in என்ற ஈமெயில் அட்ரஸ்க்கு உங்கள் புகாரின் விவரங்களை அனுப்பலாம்.
மேலும், ஆதார் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் மற்றும் அன்லாக் செய்வதற்கான ஆப்ஷனையும் UIDAI வழங்குகிறது.
ஆதார் பயோமெட்ரிக்ஸை எப்படி லாக் செல்வது?
UIDAI இணையதளத்திற்குச் செல்லவும்
பயோமெட்ரிக்ஸ் லாக்/அன்லாக் என்ற பகுதிக்குச் செல்லவும்.
உங்கள் விர்ச்சுவல் ஐடி (VID), பெயர், பின் கோட் மற்றும் கேப்ட்சா கோட்டை என்டர் செய்யவும்.
அதன் பிறகு, “சென்ட் OTP” என்பதைக் கிளிக் செய்து, ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
இதை என்டர் செய்து, பயோமெட்ரிக் டேட்டாவை லாக் செய்வதற்கான செயல்முறையை முடிக்கவும்.