இந்திய அரசு நாணயங்களில் உள்ள குறியீடு குறித்த சிறப்பு சொற்பொழிவு
இந்திய அரசு நாணயங்களில் உள்ள குறியீடு குறித்த சிறப்பு சொற்பொழிவு
55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், வாசவி கிளப் எலைட் கப்பிள்ஸ் திருச்சி அமைப்புடன் இணைந்து
இந்திய அரசு நாணயங்களில் உள்ள குறியீடு குறித்த சிறப்பு சொற்பொழிவு
நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் திருச்சி தலைவர் தனபால், செயலர் திவ்யா வீரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் தலைவர்
விஜயகுமார் இந்திய அரசு நாணயங்களில் உள்ள குறியீடு குறித்து
பேசுகையில், நாணயச் சட்டம், 1906 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) நாணயங்களை உற்பத்தி செய்வதற்கும் வழங்குவதற்கும் இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்திய அரசு நாணயங்களை தயாரிக்க நான்கு நாணய உற்பத்தி சாலைகள் உள்ளன. இந்தியாவில் அச்சிடப்பட்ட ஒவ்வொரு நாணயத்திலும் அச்சிடப்பட்ட அக்கச்சாலையின் அடையாளம் காண சிறப்பு நாணயக் குறியீடு உள்ளது.
ஒவ்வொரு உற்பத்திச் சாலைக்கும் ஒவ்வொரு குறியீடு நாணயங்களில் பயன்படுத்தப்படுகின்றன வெளிநாட்டு குறியீடுகளிலும் நாணயங்கள் அச்சிட்டு புழக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் பொது பயன்பாடு நாணயங்கள், நினைவார்த்த நாணயங்கள், புழக்கத்தில் விடப்படாத நினைவார்த்த நாணயங்கள், அக்கச்சாலை குறியீடு (Mint coins) நாணயங்கள் என வெளியிட்டு வருகின்றன.
பம்பாய் (மும்பை) நாணய சாலையில் அச்சிட்ட நாணயங்களில் வைரம் குறியீடு இடம்பெற்றிருக்கும். முன்பு ‘B அல்லது ‘M’ என்ற குறியீடு உள்ளது.
கொல்கத்தா நாணயச் சாலையில் அச்சிடப்பட்ட நாணயங்களில்
எந்த குறியீடும் கிடையாது. இந்தியாவின் முதல் நாணயச் சாலையில் எந்த அடையாளத்தையும் தேர்வு செய்யாததால் இது தனித்துவமானது ஆகும்.
ஹைதராபாத் நாணயச் சாலையில் அச்சிடப்பட்ட நாணயங்களில் நட்சத்திர குறியீடு இடம்பெற்றிருக்கும் முன்பு பிளவு பட்ட வைரமும் வைரத்தில் ஒரு புள்ளியும் அச்சிடப்பட்டிருந்தது.
நொய்டா நாணயச் சாலையில் அச்சிடப்பட்ட நாணயங்களில் புள்ளி குறியீடு இடம் பெற்றிருக்கும். இந்த நொய்டா மின்ட் தொழிற்சாலையின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது முதலில் இந்திய நிதி அமைச்சகத்தால் 1988 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிறுவப்பட்டது ஆகும் என்றார். செயலர் குண சேகர், லட்சுமி நாராயணன், முகமது சுபேர், சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.