ரிசர்வ் வங்கி ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகள் அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
நாட்டில் தற்போது அனைத்து பணப்பரிவர்த்தனையும் வங்கிகள் மூலமே நடைபெறும் நிலையில் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் வங்கிகள் அபராதமாக குறிப்பிட்ட பணத்தைப் பிடித்து கொள்கிறது. இருப்பினும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்ற அறிவிப்பை கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி. இது Basic Savings Bank Deposit Account என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. இதனை பொதுவாக ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்றும் அழைக்கலாம்.
இந்நிலையில் இந்த குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கில் பல்வேறு சீர்திருத்தங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி அனுப்பலாம் என்றும் இலவசமாக ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.