திருச்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அரசின் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ லெட்சுமி மோட்டார்ஸ் (Multi Brand car Service centre)
திருச்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அரசின் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ லெட்சுமி மோட்டார்ஸ் (Multi Brand car Service centre)
திருச்சியில் அதிநவீன இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் Software Tools உதவியுடன் ஒரு முழுமையான Multi Brand Car Service Center ஆக திகழ்கிறது. அரசின் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ லெட்சுமி மோட்டார்ஸ். திருச்சியில் கடந்த 18 ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கென தனிபிரத்யேக சர்வீஸ் சென்டராக இயங்கி வந்த இந்த நிறுவனம் தற்போது 4 ஆண்டுகளாக அனைத்து வகையான கார்களுக்குமான சர்வீஸ் சென்டராக புதிய பரிணாமத்துடன் வளர்ந்துள்ளது.
பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள், ஒரிஜினல் உதிரி பாகங்கள், கம்ப்யூட்டரைஸ்டு 3D வீல் அலைன்மெண்ட் பிரிவு, டயர்களுக்கு நைட்ரஜன் கேஸ் பில்லிங் வசதி, Interior Cleaning, Exterior Polishing, அதிநவீன பெயிண்ட் பூத், Ro water பயன்படுத்தி Foam Water Wash, Car Beauty Care எனப்படும் காரை அலங்கரிக்கும் பிரிவு என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வாடிக்கையாளர்களை மனம் கவரும் வகையில் சிறப்பான சேவை புரிந்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து ஸ்ரீ லெட்சுமி மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் சங்கர் மற்றும் பொது மேலாளர் கேசவ் ராகுல் ஆகியோர் கூறுகையில்,
திருச்சியில் கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சிக்கன மற்றும் குறித்த நேர டெலிவரி என்பது எங்கள் தலையாய நோக்கமாகும். வாடிக்கையாளர்களின் வசதிக்கென Pickup & Drop வசதி, இன்ஸ்யூரன்ஸ் புதுப்பித்தல், விபத்துக்குள்ளான கார்களுக்கான Cashless வசதி போன்றவற்றையும் செய்து தருகிறோம்.
டாடா நிறுவன கார்களுக்கென 18 ஆண்டுகளாக பிரத்யேக சர்வீஸ் சென்டராக இருந்த நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பால் தற்போது அரசின் அங்கீகாரம் பெற்ற அனைத்து பிராண்டு கார்களுக்கான சர்வீஸ் சென்டராக உயர்ந்துள்ளோம். மாருதி ஆல்டோ முதல் AUDI, BMW, BENZ என அனைத்து வகையான கார்களையும் பராமரிக்கும் அளவு தேர்ச்சி பெற்ற டெக்னீசியன்கள் கொண்ட குழு மூலம் சிறப்பான சேவை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
கரூர் பைபாஸ் சாலையில் டாடா வாகனங்களுக்கென சர்வீஸ் சென்டர், தொடர்ந்து சிந்தாமணி தாஜ் திருமண மஹால் அருகில் Multi Brand car service center, திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகில், வயலூர் ரோடு ரெட்டைவாய்க்கால் பகுதி மற்றும் கே.கே.நகர் சிம்கோ மீட்டர் பஸ்நிலையம் எதிரில், என நகரின் முக்கிய பகுதிகளில் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கும் பொருட்டு பல கிளைகளுடன் இயங்கிவரும் ஸ்ரீ லெட்சுமி மோட்டார்ஸ் அனைத்து வகையான கார் சர்வீஸிலும் புதியதொரு சகாப்தம் படைக்கும் என்றே தெரிகிறது.