Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல கல்லூரி விடுதிகளில் சேர்க்கை அறிவிப்பு !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் சேர மாணவ/ மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான 6 கல்லூரி மாணவியர் விடுதிகள், 5 கல்லூரி மாணவர் விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி, 2 தொழிற்பயிற்சி மாணவர் விடுதி, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி, ஒரு பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதி ஆக மொத்தம் 17 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

  •  கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக்ஃஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவஃமாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  •  அனைத்து விடுதி மாணவஃமாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
  •  கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும மாணவ/மாணவியருக்கு ஜமக்காளமும், அனைத்து மாணவர்ஃமாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகளும் வழங்கப்படும்.
    விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
    • பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
    தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினிகளிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2025-க்குள்ளும் சமர்பிக்க வேண்டும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, கல்லூரி மாணவ/மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.