ஜேபி மோர்கனும் தங்கத்தின் விலை உயரும் என்று கணித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,055 ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.