‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித உருவிலான ‘டெஸ்லா போட்’என்ற ‘ரோபோ’வைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த ரோபோ, உடல் அமைப்பில் மனிதர்களை போல இருப்பினும், தலைக்கு பதிலாக ஸ்கிரீன் இருக்கும். மனிதர்களுக்கான சேவகராக செயல்படும் . உயரம் 5 அடி 8 அங்குலமும், 57 கிலோ எடையுடனும் 8கி.மீ வேகத்தில் இயங்கும் உடல் உழைப்பையும், ஆபத்துள்ள பணி, சலிப்பை ஏற்படுத்தும் பணி என அனைத்தையும் செய்யும். இந்த ரோபோ அடுத்த ஆண்டே அறிமுகம் ஆகலாம்