ஆன்லைனில் லோன் வாங்க ஆசைப்பட்டவர்க்கு நேர்ந்த கதி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராஜா, அப்பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார் . தொழிலை விரிவுபடுத்த இவருக்கு ரூ .50 ஆயிரம் தேவைப்பட்டது . அப்போது ‘ இன்ஸ்டாகிராமில் ‘ வந்த விளம்பரத்தில் 50 ஆயிரம் லோன் உங்கள் வங்கி கணக்கில் வந்துவிழும் என்ற வாசகம் இருந்ததை பார்த்த ராஜா , உடனே விளம்பரத்தின் லிங்க்கை ஓப்பன் செய்தார் . பெயர், முகவரி, போட்டோ மற்றும் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை ‘ இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்தார் அடுத்ததாக ஒரு லோன் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள் என்று வந்தது. செல்போனில் கூறியபடியே டவுன்லோடு செய்தார் .
அப்போது உங்கள் செல்போனில் உள்ள தொடர்பு எண்கள் , போட்டோக்களை பார்க்க லாமா ? என்று அப்ளிகேஷனில் கேட்டுள்ளது . அதற்கும் ஓகே என்று கொடுத்துள்ளார். அதன் பிறகு லோன் பணம் ரெடி என்று வந்தது அதை திறந்து பார்த்தார் . வெறும் 3 ஆயிரம் மட்டுமே லோன் கொடுக்க முடியும் என்று வந்தது.
உடனே ராஜா இந்த லோன் எனக்கு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு இதுவரை செல்போனில் பெற்ற விவரங்களை டெலிட் செய்தார் . அதன் பிறகு ராஜாவின் செல்போனுக்கு தினமும் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் கடன் தொகையை உடனே கட்டவில்லை என்றால் பல விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் . அனைத்து வங்கி கணக்குகளையும் கூறியுள்ளார். முடக்கிவிடுவோம் என்று காலத்தின் கொடுமை என்று வாங்காத கடனுக்காக ரூ.5 ஆயிரம் வரை கட்டியுள்ளார் .
பிறகு ராஜாவின் போட்டோவை ‘ மார்பிங் ‘ செய்து பல பெண்களுடன் இருப்பது போலவும், ராஜா ஒரு திருடன் என்பது போலவும் ராஜாவின் நண்பர்களுக்கு தினமும் வாட்ஸ் ஆப் மூலம் எஸ்எம்எஸ் சென்றது . அதில் ராஜா மன உளைச்சல் அடைந்தார். இதை நிறுத்த வேண்டும் என்றால் பல ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறி குறிப்பிட்ட ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுத்து வாட்ஸ் ஆப் எஸ்எம்எஸ் வந்தது . கதறிய ராஜா , நடந்த சம்பவம் அனைத்தும் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் கொடுத்தார் அதன்பேரில் , மிரட்டிய ஆசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.