நகரில் அனைத்து நோய்களுக்கும் நவீன சிகிச்சை தரும் ப்ரண்ட்லைன் மருத்துவமனை
11ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெற்ற இலவச அறுவை சிகிச்சை முகாம்
திருச்சி, சிந்தாமணி அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது ப்ரண்ட்லைன் மருத்துவமனை. இம்மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவில், ஐசியு தீவிர சிகிச்சை பிரிவு, சாலை விபத்து பிரிவிற்கு சிறப்பு மருத்துவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் (பொது சிறுநீரகம், மகளிர்) அதிநவீன ரத்த சுத்தி கரிப்பு(டயாலிஸ்) சிகிக்சை பிரிவுகள் செயல்படுகின்றன.
மேலும் இம்மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைகளாக வயிற்று அறுவை சிகிச்சை, குடல் அடைப்பு, குடல் இறக்கம், பைல்ஸ், விரை வீக்கம், சீழ் கட்டிகள், தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், லேப்ராஸ்கோப்பி சிகிச்சைகள் (பித்தப்பை கல், அப்பன்டீஸ், குடல் இறக்கம், கர்ப்பப்பை கட்டிகள்) அனைத்துவிதமான மஞ்சள் காமாலை, கணையம் மற்றும் கல்லீரல் நோய் மருத்துவம். பக்க வாதம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதயம் – நுரையீரல் மருத்துவ சிகிச்சைகள் சர்க்கரை நோய் ஆலோசனைகள், சர்க்கரை நோயால் ஏற்படும் புண்கள், சிறுநீரகக்கல், சிறுநீரக மற்றும் மூத்திரப்பை, புற்றுநோய் சிகிச்சை, மகப்பேறு ஆலோசனை, மாத விடாய் பிரச்சனை, குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம், எலும்பு முறிவு மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மூளை கட்டிகள், தட்டுவட கட்டிகள், கழுத்து, முதுகு எலும்பு முறிவு, தீக்காய சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது.
இம்மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டம் மற்றும் தனியார் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமும் சிசிக்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் டாக்டர் என்.கார்த்திகேயன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து 11ம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
மருத்துவமனையின் 11ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த 11ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் சிறப்பு அம்சமாக 25 நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டன.
-திருச்சி நிஷா