தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தனியாக ஒரு தொழிலை துவங்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. பெண்களோ, ஆண்களோ புதிதாக தொழில் தொடங்க விரும்பவர்களுக்கு கைகொடுக்கும் ஒரு தொழில் உணவகம்.
அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு உணவு. ஆனால், தற்போது வேலைக்கு செல்பவர்கள், வெளியூரில் தங்கி படிப்பவர்கள் சரியான உணவு இல்லாமல் அதிகளவில் உணவகங்களையே தேடுகின்றனர்.
ஆகையால், உணவகம் தொழிலை சரியான திட்டத்துடன் செயல்படுத்தி, வாடிக்கையாளர்களை பெருக்கி கொண்டால் குறைந்த காலத்திலே கைநிறைய வருமானம் ஈட்டலாம்.
முக்கியமாக, உணவகம் தொடங்குவதற்கு சொந்த இடமோ அல்லது வாடகை இடமோ எதுவாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் துவங்குவது தான் வெற்றிக்கு அடித்தளமாகும்.
உணவகம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் எப்போதும், சுத்தமாகவும், காற்றோட்ட வசதியுடன் அமைதியாகவும் இருக்க வேண்டும். உணவுப்பொருட்கள் தரமாகவும், நியாயமான விலையில் இருக்க வேண்டும்.
உணவகம் நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்.உணவகம் மற்றும் உணவு வழங்குவற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். வணிகக் காப்பீடு பெற வேண்டும். ஒரு தனிப்பட்ட தொழில்முனைவோர் அல்லது சட்ட நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வர்த்தக காப்புரிமை மற்றும் SES-லிருந்து அறிவிப்பு பெற்றிருக்க வேண்டும்.
உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
முதலில் குறைந்த அளவிலான உணவுப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடலாம். நாட்கள் கூடகூட வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து உணவை தயாரிப்பை அதிகரிக்கலாம்.
நிறையோ குறையோ வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் வாடிக்கையாளர்களின் வட்டம் பெருகும்.
உணவகம் தொடங்கிய காலத்தில், சிறிய அளவில் விளம்பரங்கள் செய்யலாம். நாட்கள் செல்ல செல்ல உணவுப் பொருட்களின் சுவை வாடிக்கைகளுக்கு பிடித்து விட்டால் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை யாராலும் தடுக்க இயலாது.