பிசினசில் வெற்றிபெற அறிய வேண்டியவை
பிசினசில் வெற்றிபெற அவர்கள் செய்யும் பிசினசின் தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, செலவுகள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். பிசினசில் விற்பனையையும், லாபத்தையும் அதிகரிக்க அவர்களது பொருளுக்கான டிமாண்ட் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் பொருளாதாரத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். ஒரு பொருளை தயாரித்து மார்க்கெட்டிங் செய்ய ஆகும் செலவுகள், அதனால் கிடைக்கும் லாபங்கள், மற்ற பொருட்களுடன் இணைத்து விற்பனை செய்வதால் லாபம் உள்ளதா, லாபத்தை மேலும் அதிகரிக்கும் வழிகள் ஆகிய கேள்விகளுக்கு பதிலை தயார் செய்து கொள்ள வேண்டும். உங்கள் யோசனைகளை தயாரிப்புகளாக மாற்றி அவற்றை வாடிக்கையாளரிடம் கொண்டு போய் சேர்ப்பது மிக முக்கியமானதாக உள்ளது.