கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று விமான நிலைய உள்கட்டமைப்புத் துறையாகும். இதுகுறித்து சந்தை மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2022-ஆம் நிதியாண்டில் இந்தத் துறையின் செயல்பாட்டு வருமானம் மற்றும் செயல்பாட்டு லாபம் முறையே ரூ.14,000 கோடி மற்றும் ரூ. 3,250 கோடியாக இருக்கும். இது, 2021-ஆம் நிதியாண்டில் ரூ.1,450 கோடி செயல்பாட்டு இழப்பாக இருந்தது.
நாட்டில் இரண்டாவது கொரோனா அலை காரணமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயணிகள் போக்குவரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. ஆனால் அது கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டு வருகிறது.
மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தப்படுவது, சுற்றுலாப் பயணங்கள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த ஜூன்-அக்டோபர் மாத காலகட்டத்தில் உள்நாட்டுப் பயணிகளின் போக்குவரத்து 1
7.3 சதவீத வளர்ச்சியை எட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நடப்பாண்டின் விமானப் போக்குவரத்து 82 முதல் 84 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.