Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் திருச்சி கே.எம். டென்டல் கிளீனிக்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் திருச்சி கே.எம். டென்டல் கிளீனிக்

‘பல்’ போனால் ‘சொல்’ போகும் என்பார்கள். பல் போனால் ஆரோக்கியமும் போகும் என்பது தான் உண்மை. உண்ணும் உணவு சரியாக செரிமானம் பெற மென்று உண்ண வேண்டும். அதுவே உடலிற்கு ஆரோக்கியம். எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு பற்கள் பிரதானமாக அமைகிறது. நாம் பல்லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பல் வலி, பல் கூச்சம், பல் சொத்தை, பல் கறைகள், வாய்ப்புற்றுநோய், வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம், பற் கூச்சம் என பற்களை தாக்கும் பல்வேறு பாதிப்புகளுக்கு நவீன முறையில் சிறப்பான சிகிச்சை அளித்து வரும் வேர் சிகிச்சை மற்றும் பல் அழகு மருத்துவ நிபுணர் Ln.டாக்டர் கோகுல்கண்ணன் நம்மிடம் கூறுகையில், அதிக இனிப்புகள், அதிக குளிர்ந்த பானங்கள், சூடான உணவுகள், புகையிலையினை பயன்படுத்துவது எல்லாம் மனிதனின் ஆரோக்கியமான பற்களை பாதிக்கச் செய்கிறது. பாதிப்படையும் பற்களுக்கு நவீன முறை சிகிச்சைகள் தற்போது செய்கிறோம்.

Ln.டாக்டர் கோகுல்கண்ணன்

INTRA-ORAL SCANNER: ஒரு பல் இல்லாத இடத்திற்கு ’Bridge” முறையில் பல் கட்டும்போது பக்கத்தில் அமைந்திருக்கும் இரு பற்களின் தூண் போல் SUPPORT எடுத்துக்கொண்டு பல் கட்டுதல் என்பதே பிரதான முறை. வேர்சிகிச்சை முடித்தவுடன் அந்த பல்லை ”shap” செய்து (அ) குறைத்து “Cap” போடுவது வழக்கம். அவ்வாறு போடப்படும் “Cap” துல்லியமாகவும், கச்சிதமாகவும், பக்கத்து பற்களின் நிறங்களுக்கு ஒப்பாகவும் “SHADE MATCH” பக்கத்து பல்லை damage செய்யாமலும் இருக்க வேண்டும். இவற்றை நாம் அதிநவீன கருவியான INTRA ORAL SCANNER மூலம் அளவு எடுக்கும் போது மேற்கூறிய மூன்று நிபந்தனையும் அடையலாம். இதனால் CAP ஆனது மிகவும் கச்சிதமாகவும், பார்வைக்கு நமது இயற்கை பல்லை போலவே அமையும்.

 வேர் சிகிச்சை: வேர்சிகிச்சை என்பது சொத்தை அடைந்த பல்லை அகற்றாமல் நோய் தொற்றை நீக்கவும், வருங்காலத்தில் நுண்ணுயிரித் தொற்றிலிருந்து பல்லைக் காப்பாற்றவும் செய்யும் சிகிச்சையாகும்.

வேர்சிகிச்சை எப்போது செய்ய வேண்டும்?

1) ஆழமான பற்சொத்தை

2) சூடாக (அ) குளிர்ச்சியாக சாப்பிடும்போது ஏற்படும் பற்கூச்சம்

3) பற்களில் ஏற்படும் தேய்மானம்

4) இரு பற்களுக்கு இடையே உணவு தங்கும் பிரச்சனை ஏற்பட்டால் செய்ய வேண்டும்.

5) ஒரு பல்லை அகற்றிய பிறகு, எடுத்த இடத்தில் பல்கட்ட வேண்டுமென்றால் எடுத்த இடத்தின் பக்கத்து பற்களில் வேர் சிகிச்சை செய்து கட்ட வேண்டும்.

 வேர் சிகிச்சையில் LASER-ன் பங்கு : வேர்சிகிச்சையில் பற்களின் வேரில் உள்ள நரம்பு திசுக்களையும், பல் வலியை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரிகளும் அகற்றப்படும். அவ்வாறு அகற்றிய வெற்றிட (CANAL-™) LASER செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர் சிகிச்சை செய்யப்படும் எல்லா பற்களுக்கும் LASER சிகிச்சை அவசியமில்லை, எனினும் Infection teeth, சீழ் கோர்த்த பற்களுக்கு LASER சிகிச்சை மிகவும் பயனளிக்கும்.

ஈறு நோய் காரணமாக ஏற்படும் எலும்பு தேய்வினால் பற்களின் இடையே Spacing ஏற்படும். அப்போது பற்சொத்தை, உணவு தங்கும் பிரச்சனையும் ஏற்படும் அப்போது FULL MOUTH TREATMENT(Ü)FULL MOUTH REHABILITATION தேவைப்படுகிறது.

FULL MOUTH REHABILITATION எப்போது தேவை : · வாயிலுள்ள 50&-75% வரை பல் சொத்தையினால் பாதிக்கப்படும்போது · வயதின் காரணமாக ஏற்படும் பல் தேய்மானம் அதனால் ஏற்படும் பல் கூச்சத்திற்கும் · பல் கட்டும்போது, நிறைய பற்களின் SUPPORT தேவைப்படும்போது.

FULL MOUTH TREATMENT எடுக்கும்போது ஒருவரின் முகத்தோற்றமும் மாறுகிறது. இன்னும் அழகான புன்னகை அளிக்கிறது. இதனை நாம் Advanced Technique “INTRA ORAL SCANNER” மூலம் செய்யும்போது அவரவர் தாடை அளவுக்கு ஏற்ற பல்லும் முகத்திற்கு ஏற்ற வகையிலும்(‘’SHADE”), முக்கியமாக (TMJ) கடினமான தன்மையும் மாறாமல் செய்ய முடிகிறது. இவை அனைத்திற்கும்“INTRA ORAL SCANNER”-ன் பங்கு பேருதவி புரிகிறது” என்றார்.

வேர் சிகிச்சை மூலமாகவும் சொத்தை பல்லையும், “CAP” மற்றும் “BRIDGE” மூலம் நவீன பல் சிகிச்சை செய்து பயன்பெற்று ஆரோக்கிமாய் வாழ Ln. டாக்டர் கோகுல் கண்ணன் அவர்களை அணுகலாம்.

K.M.DENTAL CLINIC, No. 54, ஹீபர் ரோடு, பீமநகர், திருச்சி – 620 001 CELL: 95855 76627 மற்றும் No: 291/52, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, துவாக்குடி மலை, திருச்சி – 620 022 CELL: 94457 77945

 

Leave A Reply

Your email address will not be published.