திருச்சி மாநகர காவல்துறையினருக்கு சக்தியோகாலயா சார்பில் யோகா பயிற்சி
திருச்சி மாநகர காவல்துறையினருக்கு சக்தியோகாலயா சார்பில் யோகா பயிற்சி
திருச்சி மாவட்டம், சக்தியோகாலயா மற்றும் மாநகர காவல்துறை இணைந்து இன்று ஒரு நாள் (09/11/2022) யோகா பயிற்சி வகுப்பானது கே.கே நகர் மைதானத்தில் மாநகர காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதில் 160 காவல்துறையினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் , உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு , கூடுதல் துணை ஆணையர் , காவல் ஆய்வாளர் மாநகர ஆயுதப்படை, திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவர் முனைவர் தங்கப் பிச்சையப்பா , சக்தியோகாலயா நிறுவனத்தின் நிறுவனர் இளையராஜா ரெங்கசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.