நடப்பு நிதியாண்டின் (2020) முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06 லட்சம் நிகர சந்தாதாரர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ளனர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இணைந்துள்ள மொத்த உறுப்பினர்களில் 57 சதவீதத்தினர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.