மாருதி சுசுகி ஈகோ கார் விற்பனை சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்நிலையில் 2019 நவம்பர் 4 முதல் 2020 பிப்ரவரி 25 வரையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட 40,453 கார்களின் முகப்பு விளக்குகளில் பிரச்சனைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளதை அடுத்து அனைத்து கார்களையும் திரும்பப் பெற்று கோளாறுகளை சரி செய்து தர உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ள ஈகோ கார் உரிமையாளர்கள் மாருதி சுசுகி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை அணுகலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.