“6 மாதத்தில் 45 ஆயிரம் வாகனங்கள் பதிவு”
தமிழகத்தில் தற்போது 2.58 கோடி வாகனங்கள் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 96,021 வாகனங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது.
கொரோனா ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தால் இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி தொடங்கி ஜுன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மொத்தம் 45,470 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு முதல் 6 மாதத்துடன் ஒப்பிடுகையில் 3548 கூடுதலாகும். இதில் டூவீலர்கள் மட்டும் 29,908 ஆக பதிவாகி உள்ளது.