தொழில்…எத்தனை தொழில்… பணம் உங்க வீடு தேடி வரும் பாஸ்
மூர்த்தி சின்னது கீர்த்தி பெரியது,”செய்யும் தொழிலே தெய்வம் திறமைதான் நமது செல்வம்” ,”தொழிலகமே கோயில் வாடிக்கையாளரே தெய்வம்” போன்ற வாசகங்களுடன் நம்ம குடிசை தொழில் ஆரம்பிக்கலாம்.
குடிசை தொழிலில் இருக்கும் லாபம் வேறு எதிலும் இல்லை.ஆமா என்னனென்ன குடிசை தொழில்கள் செய்யலாம்.பட்டர் பிஸ்கட் வியாபாரம். அரிசி முறுக்கு கை முறுக்கு வியாபாரம் ., தட்டை வியாபாரம். ஓட்ட வடை. ஊறுகாய் .ஊதுபத்தி. தென்னை,பனை நார் கயிறுகள், மற்ற கைவினை பொருள் களை வாங்கி வியாபாரம் செய்யலாம். தள்ளுவண்டி பழம், காய்கறிகள்,பூக்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வியாபாரம் செய்யலாம்.
மின் உபயோக பொருள்கள், டிவி ,மிக்ஸி கிரைண்டர் பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் தெரிந்தால் அதற்கான கடைவைத்து பொருள் ஈட்டலாம்.இட்லி கடை நடத்தலாம். அப்பளம் போடுதல், வத்தல் போடுதல், மசாலா பொடி செய்தல், காகித பை செய்தல் இன்னும் எத்தனையோ தொழில் இருக்கிறது புரோ.. இந்த தொழில் எல்லாம் செஞ்சா பணம் உங்க வீடு தேடி வரும். மூர்த்தி சின்னதாக இருந்தாலும், கீர்த்தி பெரியதாக இருக்கும். வாங்க நாம ஏதாவது தொழில் செய்யலாம்.