உங்க ஊர் வாழை பழத்தை சிப்ஸ் ஆக்கினால்
நீங்க தாங்க… தொழிலதிபர்…
உங்க ஊரில் அதிகளவில் விளையக்கூடிய வாழை பழத்தை சிப்ஸ் ஆக்கி மார்க்கெட்டிங் செய்தால் நீங்க தாங்க தொழிலதிபர், அதற்கான சின்ன விளக்கம் இதோ…
சிறிய முதலீட்டில் என்ன தொழில் செய்வது என்று உங்களுக்கு குழப்பம் இருக்கிறதா.! நல்ல லாபகரமான தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா? குறைந்த முதலீட்டில் நீங்கள் ஒரு புதிய தொழிலை தொடங்க நினைத்தால் சிப்ஸ் தொழில் உங்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கலாம். உருளைக்கிழங்கு சிப்ஸை விட தற்போது வாழைப்பழ சிப்ஸ்களுக்கு தேவை அதிகரித்து இருக்கிறது. ஏனென்றால் வாழைப்பழ சிப்ஸ் ஆரோக்கியமான தேர்வாக இருந்து வருகிறது.
மிக குறைந்த முதலீட்டில் நடத்த முடியும் என்பதால் வாழைப்பழ சிப்ஸ் தயாரிப்பு தொழில் சுவாரஸ்யமான தேர்வாகவும் இருக்கும். தற்போது மார்க்கெட்டில் வாழைப்பழ சிப்ஸுக்கு அதிக கிராக்கி நிலவும் நிலையில் இந்த சிப்ஸ்களை லோக்கல் மார்க்கெட்டில் விற்பது எளிது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் இதன் தேவை அதிகரித்து வருகிறது. சிறிய நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் வாழைப்பழ சிப்ஸிற்கான வளர்ந்து வரும் சந்தையாக இருந்து வருகின்றன.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தொழிலை எப்படி தொடங்குவது, இதற்காகும் செலவு, லாபம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார் மற்றும் கர்நாடகா ஆகியவை வாழைப்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். வாழைப்பழம் விளையும் பகுதிகளில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக இந்த தொழிலை முயற்சிக்கலாம்!