கோடீஸ்வரனாக மாற… அந்த 3 வழிகள்…
கோடீஸ்வரனாக மாற… அந்த 3 வழிகள்…
குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் முதலீட்டுக் கலவையை (போர்ட்ஃபோலியோ) மதிப்பாய்வு செய்து வர வேண்டும். மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் மதிப்பாய்வு செய்ய வேண்டும். அதிக லாபம் தந்திருக்கும் முதலீட்டில் அதிகமாக இருக்கும் மதிப்புக்குரிய முதலீட்டை வெளியே எடுத்து, குறைவான வருமானம் தந்திருக்கும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து அஸெட் அலொகேஷனை நேர்செய்ய வேண்டும்.
சுமார் மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 100 வயது ஃபார்முலாவைப் பயன்படுத்தி அஸெட் அலொகேஷனையும் மாற்றி அமைக்க வேண்டும். அதாவது, வயது அதிகரிக்க அதிகரிக்க, அதிக ரிஸ்க்கான பங்குச் சந்தை முதலீட்டைக் குறைத்து வருவதுடன், கடன் சந்தை சார்ந்த முதலீடுகளான கடன் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீட்டை அதிகரித்து வர வேண்டும்.
நீண்ட கால முதலீட்டை 15, 20, 25, 30 ஆண்டுகளுக்கு மேற்கொண்ட பிறகு இலக்கை நெருங்கும்போது, நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகளிலிருந்து முதலீட்டை கடன் சார்ந்த திட்டங்களான ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளுக்கு மாற்ற வேண்டும். இப்படிச் செய்யும்போது முதலீடு மீதான ரிஸ்க் குறைகிறது.
இதை போர்ட் ஃபோலியோ மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். சீரான முதலீட்டு முறை, அஸெட் அலொகேஷன், முதலீட்டு மறுஆய்வு ஆகிய மூன்று விஷயங்கள் உங்களை செல்வந்தராக, கோடீஸ்வராக மாற்றும் உத்திகளாக இருக்கும்.