கொஞ்ச இடம் கொஞ்ச பணம் இருந்தா உங்களை மக்கள் தேடி வரும் தொழில் செய்யலாம்!
கொஞ்ச இடம் கொஞ்ச பணம் இருந்தா உங்களை மக்கள் தேடி வரும் தொழில் செய்யலாம்!
நான் கிராமத்தில் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம். எங்கிட்ட கொஞ்சம் இடம் இருக்கு என்று சொல்பவர்களுக்கு இந்த ஐடியா ரொம்ப பெஸ்ட். படித்துத்தான் பாருங்களேன்.
பொதுவாக கிராமங்களில் அன்றாட உபயோகப் பொருட்களை வாங்கும் கடை இல்லாததால் சிறு விஷயங்களுக்காக நகரத்திற்கு செல்பவர்கள் ஏராளம். ஆகவே நீங்கள் உங்கள் கிராமத்தில் ஒரு பல சரக்கு கடை வைத்தீர்கள் என்றால் நல்ல வருமானம் பெற முடியும். உங்கள் வீட்டின் வாசலிலேயே சிறிய கடை வைத்து ரூ.10,000 முதல் 20,000 வரை முதலீடு செய்து, இந்தத் தொழிலைத் தொடங்கலாம். இதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும். அதன் பிறகு உங்கள் கடையை நீங்களே டெவெலப் செய்துகொள்வீர்கள்.
உரம் மற்றும் விதை கடை:
கிராமத்தில் உரம் விதைத் தொழிலைத் தொடங்குவது ஒரு நல்ல தொழில் யோசனையாகும். விவசாயங்கள் உரம் மற்றும் விதைகளை உங்களிடமே வாங்கி கொள்வார்கள். உரம் மற்றும் விதைக் கடையைத் திறப்பதன் மூலம், நீங்கள் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் நேரத்தையும் மற்றும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். உரங்கள் மற்றும் விதைகள் நகரத்தில் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை நகரத்திருக்குச் சென்று தேவையான அனைத்துப் பொருட்களை வாங்கினால் போதும். இதன் மூலமும் நல்ல வருமானம் செய்யலாம்.
கால்நடை வளர்ப்பு:
ஆடு, மாடு, நாட்டு கோழி, எருமை போன்றவற்றை வளருது அதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும். உங்கள் முதலீடு இந்த விலங்குகளுக்குஉணவளிப்பதற்கு மட்டுமே பயன்படும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றை நல்ல பணத்திற்கு விற்கலாம்.
மீன், இறால், நண்டு வளர்ப்பு:
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளாக மீன், இறால், நண்டு இந்த மூன்றுமே விளங்குகிறது. ஆகவே நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வளர்த்து விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
துணிக்கடை வியாபாரம்:
பெரும்பாலும் கிராமத்தில் உள்ள மக்கள் ஏதாவது விஷத்திற்கு துணி எடுக்க வேண்டும என்றால் நகரத்திற்கு தான் செல்வார்கள். ஆகவே உங்கள் ஊரில் நீங்கள் சிறிய துணி கடை வைத்து வியாபரம் செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்க முடியும். சிறிய அளவில் இந்தத் தொழிலைத் தொடங்கிய பிறகு, காலப்போக்கில் அதையும் வளர்க்கலாம். உங்கள் கிராமத்தில் எந்த மாதிரியான ஆடைகளை மக்கள் விரும்பி அணிய விரும்புகிறார்களோ, அதே மாதிரியான ஆடைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.
இதனுடன், நீங்கள் தையல் வேலைகளையும் செய்யலாம், இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். குழந்தைகள் ஆடைகள் முதல் முதியோர் ஆடைகள் வரை அனைத்து வகையான ஆடைகளையும் விற்பனை செய்யலாம்.