வருமானத்தை அள்ளித்தரும் சோற்றுக்கற்றாழை!
வருமானத்தை அள்ளித்தரும் சோற்றுக்கற்றாழை!
பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தின் அழகை மேம்படுத்துவதற்கும், அதிகமான வளவளப்பான முடி வளர்ச்சியை பெறுவதற்கும் இந்த கற்றாழையானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டும் இன்றி பல மருத்துவ குணங்களுக்கும் இதனுடைய தேவைகள் அதிக அளவில் இருப்பதால் அதிகமாக விற்பனை செய்யபடுகிறது.
வீட்டில் சிறியதாக இடம் இருத்தாலே போதும். அதிகமான லாபம் கிடைக்கும் போது, தனியாக ஒரு இடம் பிடித்துக்கொண்டு பணியாட்கள் சேர்த்து இன்னும் அதிகமான முதலீட்டை செய்து தொழில் தொடங்கலாம். சோற்று கற்றாழையை விற்பனை செய்வது மட்டுமல்லாமல் கற்றாழை ஜெல், கற்றாழை எண்ணெய், ஷாம்பு போன்ற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம்.
சோற்று கற்றாழையானது கிராம புறங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. எனவே இந்த சோற்றுக்கற்றாழையை வாங்கி விற்பனை செய்யலாம். இந்த கற்றாழை ஆனாது கடைகளில் 1 கிலோ கற்றாழை 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 250 கிராம் கற்றாழையை 100 பீஸ் விற்பனை செய்யும் பொழுது 2500 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்.
கற்றாழையை நீங்கள் காய்கறி கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர் போன்ற கடைகளில் விற்பனை செய்து வரலாம். அதோடு ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்யலாம். உங்களுக்கு அதிகமான கஸ்டமர்ஸ் கிடைக்கவேண்டும் என்றால் சோசியல் மீடியாக்கள் மூலம் தெரியப்படுத்தி விற்பனை செய்து வரலாம்.நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் தனி முதலாளியாக வலம் வரலாம்.