பிசினஸ்மேனுக்கு தூக்கம் முக்கியம் ஏன்?
நன்மைகள் : மூளை சுறுசுறுப்பாக இயங்கத் தூக்கம் மிகவும் அவசியம். மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். உடல், மனம் இரண்டுக்கும் புத்து ணர்வு தரும். புத்திக் கூர்மையையும், செயல்திறனையும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். கோபத்தைக் கட்டுப்படுத்தும். ஆயுளை நீடிக்கும்.
தூங்காமல் இருந்தால் : எரிச்சல், கோபம், வேலையில் கவனக்குறைவு, மறதி, உடல்பருமன், மனச்சோர்வு, மன அழுத்தம், தலைவலி மற்றும் சோர்வு ஏற்படும்.
சீரான தூக்கத்துக்கு : நட்ஸ், பழங்கள், முழு தானியங்கள், புரத உணவுகள், பச்சைக் காய்கறிகள், பால், க்ரீன் டீ, குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள இட்லி, தோசை.
சரியான தூக்கம் : நாம் தூங்கும்போது கண்கள் வேகமாக அசையும், இதை ஸிணிவி நிலை என்பார்கள். இந்த நிலையில் உடலின் அனைத்து பகுதிகளும் சுயக் கட்டுப்பாட்டை இழக்கும். நம் உடல் முழுவதும் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கனவு : நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவு. நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்சனைகளே கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. சில நேரங்களில் நம் நிகழ்காலப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளும் கனவுகளின் மூலமாகவே கிடைக்கிறது.
எவ்வளவு நேரம் : 1 வயதுக்குட்பட்ட குழந்தை 17 மணி நேரமும், 5 வயதுக்குட்பட்ட 14 மணி நேரமும், 6-13 வயதினர் 9-11 மணி நேரமும், 14-17 வயதினர் 8-10 மணி நேரமும், 18-64 வயதினர் 7—-9 மணி நேரமும், 65 வயதுக்கு மேற்பட்டோர் சராசரியாக 8 மணி நேரம் தூங்கவேண்டும்.