இந்திய உள்நாட்டு சந்தையில் ஒட்டு மொத்தமாக அனைத்து வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2021-22ம் நிதியாண்டில் 1,76,17,606 ஆக இருந்தது.
அந்த எண்ணிக்கை 2022-23ம் ஆண்டில் 20.36 சதவீதம் அதிகரித்து 2,12,04,162 ஆகியுள்ளது.
இதில் கார் விற்பனை நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 38.9 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த நிதியாண்டைவிட 34.55 சதவீத வளர்ச்சியாகும். இத்தகவலை இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.