வாடிக்கையாளர்களின் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளில் இனிமேல் அவர்களின் ஆடிட்டர்கள், செலவு கணக்காளர்கள், நிறுவனச் செயலாளர்கள் மீதும் பண மோசடி தடுப்புச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நிறுவனங்கள் சார்பில் ஏதேனும் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பது, வங்கி கணக்குகளை நிர்வகிப்பது ஆகியவை அடங்கும்.
மேலும் வாடிக்கையாளர் பணம், பத்திரங்கள் அல்லது பிற சொத்துக்களை நிர்வகித்தல், நிறுவனங்களின் உருவாக்கம், செயல்பாடு அல்லது அறக்கட்டளைகள், வணிக நிறுவனங்களை வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவையும் இந்த வகை நடவடிக்கைகளில் இடம்பெறும்.
எனவே சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் இனிமேல் ஆடிட்டர்கள் மீதும் மேற்கொள்ளப்படும். இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.