-
- புன்சிரிப்புடன் வணக்கம் கூறி வாடிக்கையாளரை வரவேற்க வேண்டும். உங்களைத் தேடி பலர் வருகை தந்தாலும் வாடிக் கையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
-
- வாடிக்கையாளருடன் நட்பு முறையில் பழக வேண்டும். நீங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். வாடிக்கையாளரின் பார்வையிலிருந்து, நடைமுறையிலிருந்து அவரது தேவையைக் கண்டறிய வேண்டும். பொருளின் விலையைக் கூறுவதைக் காட்டிலும், பொருளின் பயன்களை விவரித்துக் கூறவேண்டும். உங்களின் பார்வை, பேச்சு, உடை, நடை, பாவனை அனைத்தும் வாங்கும் எண்ணம் இல்லாதவரையும் வாங்கத் தூண்டும் வகையில் அமையவேண்டும். வாடிக்கையாளர் நம்மிடம் பொருள் வாங்கவில்லை என்றாலும், நமது பொருளின்மீது நம்பகத்தன்மையை உருவாக்கிட வேண்டும்.
-
- வாடிக்கையாளருக்கு நமது பொருளின் தரம், நிறம், விலை, வடிவமைப்பு ஆகியவற்றின்மீது உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், அவர் வாங்கவில்லை என்றாலும், பிறரிடம் நமது பொருளைப் பற்றி எடுத்துக் கூறுவார். எனவே, அவரிடம் நாம் பொருளை விற்கவில்லை என்றாலும், அவர்மூலம் நமக்கு வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர் அவருக்கு வேண்டிய பொருளை வாங்கியபிறகும் குறிப்பறிந்து அவருக்கு வேண்டிய பொருள்களை வாங்கத் தூண்ட வேண்டும்.
-
- வாங்கிய பிறகும், அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். பணம் செலுத்துவதற்கும், வாங்கிய பொருள் அதிகமாக இருந்தால் காரில் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் ஆட்களின்மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-
- விற்பனை முடிந்தபிறகு வாடிக்கையாளருக்கு அவசியம் நன்றி கூறுங்கள். முடிந்தால், அவரின் முகவரியைப் கேட்டுப் பெறுங்கள். பின்னர் நேரம் கிடைக்கும்போது அவரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நமது பொருள்களின் தன்மையைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். அவருடனான உங்கள் தொடர்பினை நன்கு பலப்படுத்திக்கொள்ளுங்கள்.
- தொழில் அதிபராக இருந்தாலும், தொழில் முனைவோராக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களை மதிக்கும் பிசினஸ்மேன் எப்போதும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.