திருச்சியில் புதிய பிரம்மாண்ட திருமண மஹால் – 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி ( படங்கள் )
திருச்சியில் புதிய பிரம்மாண்ட திருமண மஹால்…. திறப்பு விழா சலுகையாக 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி…
திருச்சி வயலூர் முருகன் கோவில் செல்லும் பிரதான சாலையில் தி ராயல் மஹால் (THE ROYAL MAHAL ) ராயல் கேலக்ஸி மஹால் ( ROYAL GALAXY MAHAL) என்ற புதிய பிரமாண்டமான திருமண மஹால் ஜூலை மாதம் 7 ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதற்காக திறப்பு விழா சலுகையாக முதல் நூறு முன்பதிவிற்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மஹால் குறித்து நிர்வாகத்தினர் கூறும் பொழுது ,திருச்சி வயலூர் முறையான அனுமதி பெற்று தி ராயல் மஹால் 900 இருக்கைகள் கொண்டது. 1500 நபர்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
250 பேர்கள் ஒரே நேரத்தில் உணவருந்து Dining hall வசதி, 150 கார்கள் மற்றும் 250 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி, இரண்டு புறமும் லிப்ட், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்த வீல் சேர், சமையலுக்கு RO வாட்டர் மட்டுமல்லாமல் ஆடியோ, வீடியோ உள்கட்டமைப்பு ( Tv, Projector ) தேவைப்படுவோருக்கு குறைந்த கட்டணத்தில் தரும் ஏற்பாடு போன்ற பல்வேறு வசதிகளும் கண்கவர் இன்டீரியர் exterior வசதியுடன் உருவாக்கி உள்ளோம் .
மேலும் 300 இருக்கை வசதிகள் 500 பேர் பயன்படுத்தும் வசதி 100 பேர் உணவருந்தும் வசதி கொண்ட ராயல் கேலக்ஸி மஹால் மற்றும் Corporate Events நடத்தும் வசதியும் உள்ளது . முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த மஹாலில் தனித்தனி indoor மற்றும் outdoor கிச்சன்கள். சைவ, அசைவ உணவுகள் தயாரிக்க தனித்தனி பாத்திரங்கள்.
அவுட்டோர் buffet டைனிங் மற்றும் கேட்டரிங் சர்வீஸ், தனி EB, ஜெனரேட்டர் வசதி, மணமகன், மணமகள் அறைகள் நீங்கலாக உறவினர்கள் தங்குவதற்கு என்ற நான்கு நட்சத்திர வசதிகளுடன் கூடிய 10 அறைகள் என மிக நேர்த்தியாக திட்டமிட்டு இயற்கை சுழலுடன் கூடிய திருமண மண்டபங்களை உருவாக்கி உள்ளோம்.
இங்கு நடைபெறும் திருமணங்களில் பங்கேற்பதே ஒரு பரவசமான மற்றும் தனித்துவமான அனுபவமாக அமையும் என்று தெரிவித்தனர்.
-சந்திரமோகன்