ஜீரோவிலிருந்து ஹீரோவாகி தொழிலில் ஜெயிப்பது எப்படி?
ஜீரோவிலிருந்து ஹீரோ ஆவதற்கு……
- முதலில் எண்ணம்.. தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்.
- வாடிக்கையாளர்களின் தேவையை கண்டறிதல்
- வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொளல்
- ரிஸ்க் எடுத்தல்.
- தீராத வேட்கை, அர்ப்பணிப்பு
- தொழிலை போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவது.
- நிர்வாக உள்கட்டமைப்பு.
தொழிலில் ஜெயிப்பதற்கு பார்முலா
1) ஆரம்பத்தில் தொழிலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை கடின மனதோடு ஏற்றுக்கொண்டு அடுத்த வாய்ப்புகளை ஆராய்வது.
2) தொலைநோக்கு பார்வையுடன் ஒரு தொழிலை அணுகுவது
3) தனது தொழில், சமூகத்திற்கு எவ்வளவு நன்மையளிக்கிறது என்று உணர்ந்து செய்வது.
4) தொழிலில் நஷ்டமடைந்தாலும், அதை நேர்மையாக கையாளும்விதம்
5) தொழிலில் அடுத்தடுத்து வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை நம்பிக்கையுடன் செய்வது.
பாராட்டு வேணுமா?
தோல்விகள் ஏற்பட்டால் அதை எண்ணி நொறுங்கி விடாமல், எதிர்த்து மோதி, எந்தப் பிழையால் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து பயணிப்பது தான் வெற்றிக்கு வழி செய்யும். பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்கிறார்கள். அந்த வழியில் சென்று வெற்றி அடைந்தவர்கள் ஆயிரமாயிரம் உள்ளனர்.
அவர்களை உங்களின் மாதிரிகளாக முன்னிறுத்துங்கள். வெற்றிக்காக காத்திருக்காதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள். முயற்சிகள் பல செய்து, விடாமுயற்சியுடன் உழையுங்கள். போராடும் போது, “வீண்முயற்சி செய்கிறாய்” என்றவர்களே, நீங்கள் வென்ற பிறகு, “விடாமுயற்சியுடன் உழைத்தவர்” என்று புகழாரம் சூட்டுவார்கள்.