கடன் அட்டையை கேன்சல் செய்வதில் கவனிக்க வேண்டிய விஷயம்..!
வங்கிகள் கொடுக்கும் கடன் அட்டை உங்களுக்கு தேவையில்லை என்றால் உடனே அதை இரண்டாக, நாலாக உடைத்துப் போட்டு, தொல்லையிலிருந்து தப்பித்தோம், வேலை முடிந்து விட்டது என இருந்து விடாதீர்கள்.
கடன் அட்டை கொடுத்த உங்கள் வங்கிக்கு, கடன் அட்டையை திருப்பி அளிப்பதாகவும் ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு, உங்கள் பெயர், வங்கி கணக்கு எண் எழுதி வங்கிக்கு ஒரு கடிதத்தை பதிவு தபாலிலோ அல்லது கூரியரிலோ அனுப்பிவிடவும்.
மேலும் உங்களுக்கு கடன் அட்டை கொடுத்த வங்கிக்கு சென்று கடன் அட்டை வழங்கு பிரிவில், ‘அட்டையை திருப்பி அளிக்கிறேன்’ என தகவல் தெரிவித்துவிடவும். இப்படி நீங்கள் செய்வதால் தேவையற்ற ஆண்டு சந்தா மற்றும் பிற கட்டணங்களை தவிர்க்கலாம்.