Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் தீம் பார்ட்டி ஷாப்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியில் தீம் பார்ட்டி ஷாப்

முகநூல்களில் பர்த்டே பார்ட்டி புகைப்ப டங்களை பார்த்து இது போல நம் குழந்தையின் முதல் பிறந்த நாளை அலங்கரித்து கொண்டாட வேண்டும் என பெற்றோர்கள் திட்டமிடுவர். ஆனால் அதற்குறிய அலங்கார பொருட்கள் அவர்கள் நினைக்கும் வண்ணம் கிடைக்காமல் போக, பணம் இருந்தும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அன்றைய நிகழ்வினை சிறப்பாக நடத்த முடியவில்லையே என ஏக்கத்துடன் கடந்த செல்வர்.

இனி அந்த ஏக்கத்தை போக்கவே வந்திருக்கிறது TOUCHSTONEஎன்ற பெயரில் வந்துள்ளது புதிய THEME PARTY SHOP. திருச்சி, உறையூர், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது இந்த தீம் பாரட்டி ஷாப்.  தீம் பாரட்டி ஷாப் குறித்து உரிமையாளர் ஷெர்லி தீபக் நம்மிடம் கூறுகையில், “எனக்கு டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வம் உண்டு. நண்பர்களின் இல்ல விழாக்களில் நானாக தயாரித்த பொருட்களை கொண்டு அலங்கரிப்பதை பலரும் பாராட்டினர். அது எனக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. கடந்த 2013 முதல் EVENT MANAGEMENT நடத்தி வருகிறேன்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன். கொண்டாட்டத்தின் போது அவர்கள் அந்த இடத்தை அலங்கரித்த விதமும் அதற்கு அவர்கள் பயன்படுத்திய டிசைன் பொருட்களும் என்னை மலைக்கச் செய்தது. இந்தியா திரும்பும் போது அத்தகைய பொருட்களை சிலவற்றை வாங்கி வந்தேன். அதே போல் என்னுடைய பெண்ணின் பிறந்த நாளை தீம் உருவாக்கி அலங்கரிக்க நினைத்தேன். ஆனால் நான் நினைத்த வண்ணம் பொருட்கள் கிடைக்கவில்லை. அப்போது தான் திருச்சியில் இதற்கென தனியாக ஒரு கடை திறக்கலாம் எனத் தோன்றியது” என்றார்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கிறிஸ்துமஸ் திருநாளின் போது பயன்படுத்தத் தேவையான பூக்கள், கிறிஸ்துமஸ் தாத்தா முகமூடி, கிறிஸ்துமஸ் பந்து, சிறிய கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் ஸ்டார், பலூன், பிறந்த நாளின் போது அலங்கரிக்க வண்ண வண்ண பலூன்கள், Cake Topper, Fairy Lights, Return Gift Bags, Paper Fans மற்றும் அனைத்து விதமான பார்ட்டி நிகழ்ச்சிகளின் போது அலங்கரிக்க Banners, Buntings, Streamers, Chalk Board, Straws, Candles, Cups, Plates, Hats, Foil Balloons திருமண விசேஷத்தின் போது பயன்படுத்த Bridal Glass, Photo Booth, Props, Glasses என ஏராளமான பொருட்கள் டச் ஸ்டோனில் கிடைக்கின்றன.

பெரும்பாலான காகித அலங்கார பொருட்களை இவர்களே உருவாக்குவதோடு சந்தைக்கு வரும் புதிய புதிய பொருட்களை கண்டறிந்த அவற்றை உடனுக்குடன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். புதுடெல்லி, பெங்களுர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து அலங்கார பொருட்களை வரவழைக்கின்றனர்.
பிறந்த நாள் பார்ட்டி, திருமண வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களின் போது புதிய தீம் உருவாக்கி அதற்கேற்ப அலங்கரித்து ஒர் அழகிய நினைவலைகளை நம்முள் பதித்து விடுகின்றனர். உங்கள் இல்ல விழாக்களின் போதும் அது போன்ற அமைக்க விரும்புகிறீர்களா..

தொடர்பு கொள்ளுங்கள் : 99444 57909

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.