இன்றைய (அக்டோபர் 13) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தஙக்ம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒரு சவரன் நகை விலை மட்டுமே, ரூ.90 ஆயிரத்தை கடந்தது.இதுவே பேரதிர்ச்சியாக இருக்கும் நிலையில், அடுத்தடுத்து தங்கம் விலை உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.அந்த வகையில் நேற்று முன் தினம், அக்டோபர் 11ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.


வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



