இந்த மிகப்பெரிய அதிகரிப்புக்கு பின்னால் பல உலகளாவிய பொருளாதார, புவிசார் அரசியல் உள்ளிட்டவை இருப்பதாக தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கத்திற்கு ஈடாக வெள்ளியிலும் முதலீடு செய்யத் தொடங்கினர். மேலும், தங்கம், பங்குகள், பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை வெள்ளி விஞ்சியுள்ளது. இந்த நிலையில், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீட்டு ஆதாரமாக வெள்ளி வேகமாக வளர்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் நாட்களில் வெள்ளி விலை எப்படி? நிபுணர்கள் தெளிவான கணிப்புகளை வழங்கி உள்ளனர். தற்போதைய சந்தை போக்கைக் கருத்தில் கொண்டு, அடுத்த இலக்குகள் $58–$60–$65ஆக உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தொழில்துறை நுகர்வு, பாதுகாப்பான முதலீட்டு உணர்வு மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கலவையானது வெள்ளி விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் அக்ஷா காம்போஜ் கூறினார். முதலீட்டாளர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் கவனமாகப் பரிசீலித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.


