வாசகர்களின் ஷொட்டுகள்…
‘பிசினஸ் திருச்சி’ இதழை படித்தேன் அதில் நவீன வர்த்தகத்துடன் கைகோர்க்கும் பாரம்பரிய விவசாயம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விவசாயத் தொழிலில் எவ்வாறு வெற்றி பெறமுடியும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
-ராஜசேகர், மருதாண்டகுறிச்சி
“பெண்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை ஏற்க தயார்படுத்திக் கொள்வது எப்படி“ என்று வெளியான செய்தி பெண்கள் முன்னேற்றத்திற்
கான கட்டுரையாக நான் உணருகிறேன்.
-பிருந்தா, மணப்பாறை
தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் வங்கி வாராக்கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இருக்கக்கூடிய வங்கிகளே இணைக்கப்பட்டு கொண்டி ருக்கிறது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் அதிகாரமே கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிப்பது பற்றி வெளியான செய்தியை படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது.
-ராஜ்குமார், திருவரம்பூர்
பிசினஸ் திருச்சியில் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளும் முக்கியத்துவம் கொடுத்தால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டிசம்பர் முதல் வார இதழில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.
-அலெக்ஸ், கீழகல்கண்டார்கோட்டை
உங்கள் எண்ணங்களை பதிவிட
வாட்ஸ்அப் எண்
98424 10090