Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training And Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலக தர உணவு (Golbal Food & Beverage Service Eco-Tourism), தொழில்நுட்ப Al பயிற்சி (Advanced Artificial Intelligence(Al)). ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Golbal Food & Beverage Service Eco-Tourism). உயர் தொழில்நுட்ப Al பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும், கல்வி தகுதியாக பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும், கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ. ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி 620 001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப..  தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.