ஜி.ஆர். பாலசுப்பிரமணியம் – GRB நெய் நிறுவனர் வரலாறு
இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் உள்ள விருப்பாச்சி அருகே சின்னகரட்டுப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். 6 பிள்ளைகள் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் 5-வது பிள்ளை.
ஆரம்ப வாழ்க்கை:
- படிப்பில் ஆர்வம் இருந்தும் குடும்ப சூழ்நிலையால் 8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தினார். • 13 வயதில் பெங்களூருவில் இருந்த அக்கா வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு 1970 முதல் அக்கா குடும்பம் செய்து வந்த மார்க்கெட்டில் வெண்ணெய் வாங்கி வீடு வீடாக சைக்கிளில் சப்ளை செய்யும் தொழிலில் 14 வருடம் இருந்தார்.
தனி தொழில் தொடக்கம்:
- திருமணத்துக்கு பிறகு தனியாக தொழில் தொடங்கும் நிலை வந்தது. கையில் ரூ.6000 மட்டுமே இருந்தது. ரூ.3000 வீட்டு வாடகை கொடுத்துவிட்டு மீதி ரூ.3000-ல் தொடங்கினார். முதல் மாதம் ரூ.1000 கூட சம்பாதிக்க முடியவில்லை. • பின் தெரிந்தவர்களிடம் ரூ.50,000 சீட்டு போட்டு அந்த பணத்தை முதலீடாக போட்டார். • மாதத்தில் 15 நாள் தான் வெண்ணெய் வியாபாரம், மீதி நாள் கெட்டுப்போகும் என்பதால், அதை நெய்யாக காய்ச்சி ஹோட்டல்கள், ஸ்வீட் கடைகளுக்கு சப்ளை செய்யும் ஐடியா அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. 75 கிலோவில் தொடங்கிய வியாபாரம் சில மாதங்களில் ரூ.25,000 வருமானமாக உயர்ந்தது.
GRB பிராண்ட் உருவாக்கம்:
- 1984-ல் தொடங்கி 1986-ல் தன் பெயர் சுருக்கத்தையே GRB என்று பிராண்டாக பதிவு செய்து பாட்டில் பேக்கிங், லேபிளுடன் விற்க ஆரம்பித்தார். • 1993-ல் இந்தியாவிலேயே முதன்முறையாக நெய்யை FMCG முறையில் – விநியோகஸ்தர்கள் மூலம் கடை கடையாக கொண்டு சென்ற முதல் நிறுவனம் GRB தான். • 1999-ல் ஓசூரில் முதல் நவீன தொழிற்சாலை, பின் சென்னையில் கார்ப்பரேட் அலுவலகம். • சென்னை மார்க்கெட்டில் போட்டி அதிகம், விலை ரூ.20-30 அதிகம் என்று நிராகரிக்கப்பட்டாலும், தரத்தால் வென்றார். அதற்காக Udhayam என்ற இன்னொரு பிராண்டையும் உருவாக்கினார்.
இன்றைய நிலை:
- 2000-களில் சிங்கப்பூர், மலேசியா ஏற்றுமதி தொடங்கி இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, UAE உட்பட 50+ நாடுகளுக்கு ஏற்றுமதி. • நெய்யை தாண்டி ஸ்னாக்ஸ் (Town Bus), இனிப்புகள், மசாலா, Instant Mix என 70+ பொருட்கள். • திண்டுக்கல் நிலக்கோட்டையில் ரூ.200 கோடியில் புதிய ஆலை உட்பட 6 ஆலைகள், 2500 ஊழியர்கள், கடந்த ஆண்டு ரூ.1400 கோடி டர்ன் ஓவர். முழுக்க முழுக்க கடன் இல்லாமல், வெளி முதலீடு இல்லாமல் வளர்ந்த நிறுவனம்.
அவரது தத்துவம்: தரத்தில் சமரசம் இல்லை, தொழிலை பேஷனாக நினைப்பது, ஊழியர்களை திறமை அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்வது, போட்டியை நேர்மறையாக பார்ப்பது.
ஒரு குக்கிராமத்து 8-ம் வகுப்பு மாணவரின் உழைப்பு இன்று உலக பிராண்டாகியிருக்கு.



